வன்னியில் கண்ணிவெடி அகற்றும் பணியில் முன்னாள் விடுதலைப்புலி பெண் போராளிகள். PDF Print E-mail
Tuesday, 20 July 2010 13:01

வட பகுதியில் நிலக்கண்ணி வெடிகளை அகற்றும் பணியில் முன்னாள் விடுதலைப்புலி பெண் உறுப்பினர்கள் 30 பேர் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர் எனப் பாதுகாப்புப் பிரிவின் தகவல்களை மேற்கோள் காட்டி செய்திகள் தெரிவிக்கின்றன.

மேலும் கண்ணி வெடிகள் அகற்றும் பணியில் இராணுவப் படையினர் தவிர்ந்த 6 அரச சார்பற்ற நிறுவனங்களும் ஈடுபட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

வடபகுதியில் கண்ணி வெடிகளை அகற்றுவதில் 90 வீதமான பணிகள் இராணுவத்தினராலேயே மேற்கொள்ளப்படுகின்றது எனப் பாதுகாப்புப் பிரிவு தெரிவித்துவரும் நிலையில் மேற்படி விடுதலைப்புலி பெண் உறுப்பினர்கள், அரச சார்பற்ற நிறுவனத்தின் கீழ் இவ்வாறு கண்ணிவெடி அகற்றும் பணிகளில் ஈடுபடுத்தப்பட்டுவருவதான செய்திகள் வெளியாகியுள்ளன.

Last Updated ( Tuesday, 20 July 2010 14:23 )
 

மனித உரிமை செயற்பாட்டாளருடனான நேர்காணல்;

Interview with Mr jay aiyathurai

பாவனையாளர்

We have 80 guests online