| வெள்ளைகொடி விவகாரம் பொன்சேகா நீதிமன்றத்திற்கு அழைப்பு; இன்று விசாரணை |
|
|
|
| Monday, 26 July 2010 08:58 |
|
அரசினால் நியமிக்கப்பட்ட மூன்று நீதிபதிகள் அடங்கிய குழு இந்த விசாரணையினை இன்று மேற்கொள்வதாக தெரிவிக்கப்படுகிறது. இதற்காக பொன்சேகாவை நீதிமன்றில் முன் நிறுத்துமாறு கூறப்பட்டுள்ளது. இன்று பொன்சேகா தனது கருத்திற்கான வலுவான ஆதாரங்களை சமர்ப்பிக்க வேண்டும் எனவும், இல்லாவிடில் அவருக்கு சிறைத்தண்டனை விதிக்கப்படும் எனவும் அரசதரப்பு வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. |








கடந்த ஆண்டு வன்னியில் நடைபெற்ற உக்கிர மோதலின் முடிவில் வெள்ளைக்கொடியுடன் சரணடைந்த நடேசன் மற்றும் புலித்தேவன் உட்பட பல விடுதலைப்புலிகளின் முக்கிய உறுப்பினர்களை மேலிடத்தில் இருந்துவந்த கட்டளைகளுக்கு இணங்க சுட்டுக்கொன்றதாக முன்னாள் இராணுவத்தளபதி ஜெனரல் பொன்சேகா கூறிய கருத்துக்கள் தொடர்பாக நிதிமன்றம் இன்று விசாரிக்கின்றது. 






