| மிருசுவில் கொலை வழக்கு கொழும்பு நீதிமன்றத்தில் விசாரண. |
|
|
|
| Monday, 26 July 2010 09:13 |
|
சட்ட மா அதிபரால் தாக்கல் செய்யப்பட்டுள்ள இந்த வழக்கு கொழும்பு நீதிமன்றத்தில் விசாரிக்கப்பட உள்ளது. தீபாலி விஜேசுந்தர, சுனில் ராஜபக்ஷ, வராவெல ஆகிய 3 நீதிபதிகளைக் கொண்ட குழு இதற்காக நியமிக்கப்பட்டுள்ளது.2000 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் 19 ஆம் திகதி மிருசுவிலில் 8 பொதுமக்களை கொலை செய்ததுடன் பொன்னுத்துரை மகேஸ்வரன் என்பவருக்கு காயமேற்படுத்தியமை உள்ளிட்ட 19 குற்றச்சாட்டுகளின் அடிப்படையில் 5 இராணுவத்தினருக்கு எதிராக வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. குற்றம் புரியும் சிறிலங்கா இராணுத்தினருக்கு எதிராகவும் சட்டம் செயற்பட்டு வருகிறது என்ற மாயையை சர்வதேச ரீதியில் ஏற்படுத்துவதற்காகவே காலம் கடந்து இந்த விசாரணையை சிறலங்கா அரசு மேற்கொள்வதாக சுட்டிக் காட்டப்பட்டுள்ளது. |








2000ம் ஆண்டில் 8 பொதுமக்களைக் கொலை செய்ததாக இராணுவத்தினருக்கு எதிராகத் தொடரப்பட்ட வழக்கு எதிர்வரும் 30ம் திகதி விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட இருக்கிறது.






