| சிவந்தனிடம் டோவரில் வைத்து பிரித்தானிய காவல்துறையினர் விசாரணை. 2 மணித்தியாலங்கள் தாமதமாகி தொடர்ந்த நடை பயணம். |
|
|
|
| Monday, 26 July 2010 18:09 |
|
நெடுஞ்சாலைகள் ஊடாக நடந்து செல்ல காவல்துறையினரின் அனுமதி வழங்கப்படாத நிலையில், அவற்றிற்கு அண்மித்த மாற்று வழிகள் ஊடாக நடந்து சென்ற சிவந்தன் மிகவும் களைப்படைந்த நிலையிலும், கால் தசைநார்கள் இறுகிய நிலையிலும் காணப்படுகின்றார். ஜெனீவாவிலுள்ள ஐ.நா மனித உரிமைகள் சபை நோக்கி மனிதநேய நடைப்பயணம் மேற்கொண்டுள்ள சிவந்தன் பிரித்தானிய கடற்கரையான டோவரில் இருந்து மாலை 5:50 அளவில் பரிஸ் நோக்கி ஊர்தித் தாங்கிக் கப்பலில் புறப்பட்டுள்ளார். பிரான்சின் கரையான கலையை அடைந்த பின்னர் பரிஸ் ஊடாக ஜெனீவா செல்லவுள்ளார். பிரான்சில் பிரித்தானியாவைவிட அதிக தூரம் நடக்க வேண்டியிருப்பதால், சிவந்தனுக்கு உற்சாகமும், ஆதரவும் வழங்க பிரான்ஸ் வாழ் தமிழ் மக்கள் தயாராகுமாறு அங்குள்ள தமிழ் அமைப்புக்கள் அழைப்பு விடுத்துள்ளன. இன்று மாலை 5: 50 ற்கு பிரித்தானியாவில் இருந்து புறப்பட்ட சிவந்தன் இன்று இரவு 8:15 அளவிலேயே பிரான்ஸின் இறங்குதுறையான கலையை சென்றடைவார் என கூறப்பட்டுள்ளது. |








பிரித்தானிய பிரதமர் இல்லத்திற்கு முன்பாக கடந்த வெள்ளிக்கிழமை இரவு நடைபெற்ற பேரணியைத் தொடர்ந்து 2000 இற்கும் மேற்பட்டோர் வழியனுப்பி வைக்க, சிவந்தன் ஆரம்பித்த பயணம் கடற்கரை டோவரை இன்று பிற்பகல் 2:30 மணியளவில் சென்றடைந்தார். 






