| கன்னிவெடிகளை அகற்றும் பணியில் தமிழ் பெண்கள். இளம் பெண்களை அங்கவீனர்களாக்கும் முயற்சி! |
|
|
|
| Tuesday, 27 July 2010 09:36 |
|
யுத்தச் சூழலில் கணவரை இழந்தவர்கள், கணவனை தடுப்புக்காவலில் வைத்துள்ளதால் பிரிந்துள்ள பெண்கள், மற்றும் கணவன் காணாமல் போனமையால் தனித்து வாழும் பெண்கள் போன்ற தனிமையான பெண்களை தேர்ந்தெடுத்து ஸ்ரீலங்கா படைத்தரப்பினர் கண்ணிவெடி அகற்றும் பணிக்கு என இலங்கை வந்துள்ள சுவீடனின் எவ்.எஸ்.டி என்கிற கண்ணிவெடி அகற்றும் நிறுவனத்தினருடன் இணைத்து கண்ணிவெடி அகற்றும் பணியை ஆரம்பித்துள்ளனர். கண்ணிவெடி அகற்றும் பணியில் 45 பெண்கள் உட்பட 600 பேர் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர் என எவ்.எஸ்.டி நிறுவனத்தின் இலங்கைக்கான திட்ட முகாமையாளர் நைஜல் ரொபின்சன் தெரிவித்துள்ளார். அண்மையில் விடுதலைப்புலிகளின் முன்னாள் பெண் போராளிகளை வன்னிப்பகுதியில் உள்ள கண்ணிவெடிகளை அகற்றும் பணியில் எந்த வித நவீன உபகரணங்களும் அற்ற நிலையில் ஸ்ரீலங்கா இராணுவத்தினர் ஈடுபடுத்தியமை குறிப்பிடத்தக்கது. குறிப்பாக 18 வயதிற்கும் 40 வயதிற்கும் இடைப்பட்ட ஆண்களை கைது செய்வது, கொலை செய்வது, மற்றும் போரினால் பாதிக்கப்பட்டு வந்தவர்களின் அபயவங்களை துண்ணாடி அங்கவீனர்களாக்குவது என செயற்பட்டு வந்த சிங்கள பேரினவாத அரசும், ஸ்ரீலங்கா இராணுவப்படைகளும் தற்போது அதே பாணியில் தமிழ் இளம் பெண்களை செயற்படுத்த முனைவதை அவதானிக்க முடிகிறது. அதாவது கணவன்மாரை பிரித்து சிறையில் அடைப்பது, கேவலமான முறையில் அவர்களுடன் நடந்து கொள்வது, பாலியல் வல்லுறவுக்கு உட்படுத்துவது, தனிமைப்படுத்தி மனரீதியில் அவர்களை பாதிப்படைய செய்வது, இப்போது அவர்களையும் அங்கவீனர்களாக்க கண்ணிவெடி அகற்றும் பணிகளில் ஈடுபடுத்துவது என தனது இன அழிப்பு சதியை செய்துவருகிறது. உண்மையில் இவ்வளவு காலம் நடைபெற்ற போரினால் பாதிக்கப்பட்ட மக்களை விட தற்போதே அதிகளவில் மக்கள் பாதிக்கப்படுவதும், தமிழ் இனம் அழிக்கப்படுவதும், தமிழரின் வழங்கள் அழிக்கப்படுவதும், சூறையாடப்படுவதும் கவனிக்கத்தக்கது.
|








வவுனியா , முல்லைத்தீவு , கிளிநொச்சி போன்ற மாவட்டங்களில் கண்ணிவெடி அகற்றும் பணியில் யுத்தத்தால் பாதிக்கப்பட்ட பெண்கள் ஈடுபடுத்தப்பட்டுள்ளார்கள்.








