| தமிழ் தேசியக் கூட்டமைப்பை தமிழர்களின் ஏக பிரதிநிதிகளாக ஏற்க முடியாது – மனோ கணேசன் |
|
|
|
| Tuesday, 27 July 2010 11:35 |
|
கொழும்பிலிருந்து வெளிவரும் ஊடகமொன்றிற்கு வழங்கிய செவ்வியிலேயே அவர் இந்தக் கருத்தைத் தெரிவித்துள்ளார். தமிழ் மக்களில் ஒரு சாராரை மட்டுமே தமிழ் தேசியக் கூட்டமைப்பு பிரதிநிதித்துவப் படுத்துவதாகக் குறிப்பிட்ட மனோ கணேசன் அரசியலமைப்புத் திருத்தம் குறித்த பேச்சுக்களின் போது ஏனைய தமிழ் கட்சிகளின் கருத்தும் கேட்டறியப்பட வேண்டும் எனத் தெரிவித்துள்ளார். அரசியலமைப்பு மாற்றம் குறித்த விடயத்தில் தமிழ் தேசியக் கூட்டமைப்பு மற்றும் மலையகக் கட்சிகளுடன் பேச்சுக்களை நடத்தி ஒத்த முடிவினை எட்ட வேண்டும் என்று தான் கருதுவதாகவும் இதற்கான பேச்சுக்கள் நடத்தப்படுமிடத்து அதில் ஜனநாயக தேசிய முன்னணி கலந்து கொள்ளும் எனவும் அவர் தெரிவித்தார். |








தமிழ் தேசியக் கூட்டமைப்பினரை தமிழ் மக்களின் ஏக பிரதிநிதிகளாக ஏற்றுக் கொள்ள முடியாது என ஜனநாயக மக்கள் முன்னணியின் தலைவர் மனோ கணேசன் தெரிவித்துள்ளார்.






