தமிழ்த்தேசியக் கூட்டமைப்பு முஸ்லிம் காங்கிரசு வியாழக்கிழமை சந்திப்பு PDF Print E-mail
Tuesday, 27 July 2010 11:41

தமிழ்த்தேசியக் கூட்டமைப்பு நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கும் சிறிலங்கா முஸ்லிம் காங்கிரசு நாடாளுமன்ற உறுப்பினர்களுக்குமிடையிலான சந்திப்பு எதிர்வரும் வியாழக்கிழமை கொழும்பில் நடைபெற இருக்கிறது.

வடக்கு-கிழக்கு இணைப்புத் தொடர்பில் இவ்விரு கட்சிகளுக்குமிடையில் ஏற்பட்டுள்ள கருத்து முரண்பாடுகளைக் களைவதை முக்கிய நோக்கமாகக் கொண்டு இந்தச் சந்திப்பு ஒழுங்கு செய்யப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது.

எனினும் அரசியல் அமைப்புத் திருத்தங்கள் வடக்கு கிழக்கில் இடம்பெறும் சிங்களக் குடியேற்றங்கள் உள்ளிட்ட விடயங்களும் இந்தச் சந்திப்பில் ஆராயப்படலாம் என நம்பப்படுகிறது.

தமிழ்த்தேசியக் கூட்டமைப்பு இரா.சம்பந்தன் தலமையிலும் சிறிலங்கா முஸ்லிம் காங்கிரசு ரவூப் ஹக்கீம் தலமையிலும் இந்தப் பேச்சுக்களில் கலந்து கொள்ளும் என எதிர்பார்க்கப்படுகிறது.

 

மனித உரிமை செயற்பாட்டாளருடனான நேர்காணல்;

Interview with Mr jay aiyathurai

பாவனையாளர்

We have 114 guests online