தடுப்புக்காவலில் உள்ள 12,000 புலிகளையும் தொடர்ந்து தடுத்துவைக்கும் நோக்கமா? மணலாற்றில் தாக்குதல் - 40 இராணுவம் காயம் எனும் செய்தியின் நோக்கம் என்ன? PDF Print E-mail
Tuesday, 27 July 2010 12:14

நேற்று முந்தினம் மணலாற்றுப் பகுதியில் இராணுவத்தினர் மீது புலிகள் தாக்குதல் நடத்தியுள்ளதாகவும் அதில் 40க்கும் மேற்பட்ட இராணுவத்தினர் காயமடைந்து உலங்குவானூர்தி மூலம் அனுராதபுர வைத்திய சாலைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளதாக சில இணையங்கள் செய்தி வெளியிட்டுள்ளது.

குறிப்பிட்ட செய்தி முதல் முதலாக மின்னஞ்சல் மூலமாகவே பரப்பப்பட்டிருந்தது.
இதை சில இணையங்கள் முந்தியடித்துக்கொண்டு வெளியிட்டிருந்ததையடுத்து தற்போது பல முக்கிய இணையங்களும் இந்த செய்தியை பிரசுரித்துள்ளனர்.

இதே போன்று கடந்த மாதம் மணலாற்றுப் பகுதியில் இலங்கை இராணுவத்தினரிற்கு சொந்தமான இரு உலங்கு வானூர்திகள் தாக்குதல் நடத்தியதாக பல இணையங்கள் செய்தி வெளியிட்டிருந்தனர்,ஆனால் அந்த செய்தியில் எந்தவிதமான உண்மையுமில்லை என்று சில நாட்களில் முக்கிய உறுப்பினர்கள் சிலர் தெரிவித்திருந்ததுடன் இது இலங்கை புலனாய்வுத்துறையினரின் சதி வேலையே அன்றி வேறொன்றும் அல்ல என்று அவர்கள் தெரிவித்திருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

12
ஆயிரத்திற்கும் மேற்பட்ட தமிழீழ விடுதலைப் புலிகள் இலங்கை இராணுவத்தினரின் சிறைகளில் அடைக்கப்பட்டுள்ள நிலையில் புலிகள் இவ்வாறான தாக்குதல்களை நடத்துவார்களா என்பதை சிந்தித்துப் பார்க்கவேண்டும்.

இவ்வாறான காட்சிகளை சித்தரித்து அதை மக்களையும் அவதானிக்க வைத்து செய்திகளை உண்மைபோல் பரவவிட்டு தமக்கு தொடர்ந்தும் புலிகளால் ஆபத்தும், அச்சுறுத்தலும் இருப்பதாக காட்டி சர்வதேசத்தின் அழுத்தங்களை குறைத்து தடுப்புக்காவலில் உள்ள 12,000 க்கும் மேற்பட்ட முன்னாள் புலி உறுப்பினர்களையும் தொடர்ந்தும் தடுத்துவைக்கும் நோக்கம் கொண்டதே என்பதை புலம் பெயர் தமிழர்களும், செய்திகளை பரப்பும் தமிழர்களும் புரிந்து கொள்ள வேண்டும்.

Last Updated ( Tuesday, 27 July 2010 12:48 )
 

மனித உரிமை செயற்பாட்டாளருடனான நேர்காணல்;

Interview with Mr jay aiyathurai

பாவனையாளர்

We have 111 guests online