200 கிலோ மீற்றர் தூரத்தையும் தாண்டி பிரான்ஸ் வளியாக நடை பயணம் தொடரும் சிவந்தன். PDF Print E-mail
Wednesday, 28 July 2010 15:28

 

லண்டன்
வெஸ்மினிஸ்ரர் பகுதியில் இருந்து ஜெனீவாவில் உள்ள ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் சபை நோக்கி மனிதநேய நடை பயணம் மேற்கொண்டுள்ள சிவந்தன் 200 கிலோ மீற்றர் தூரத்தையும் தாண்டி பிரான்ஸ் வளியாக இன்று 5வது நாளாக தனது பயணத்தை அதே உற்சாகத்துடன் தொடர்ந்து வருகின்றார்.

இருப்பினும் அவரது காலில் அவ்வப்பொழுது வலி ஏற்படுவதை அவரது நடையில் இருந்து அவதானிக்க முடிவதாகவும், இருப்பினும் அவர் உறுதியோடு தனது நடைபயணத்தை தொடர்ந்து மேற்கொண்டுவருவதாகவும் அங்குள்ள உதவியாளர்கள் தெரிவிக்கின்றனர்.

 

பிரித்தானியாவில்
121 கிலோ மீற்றர் தூரத்தை நடந்து சென்று திங்கள் இரவு பெரி மூலம் பிரான்ஸின் இறங்கு துறையான கலையை சென்றடைந்த சிவந்தன் இன்று ஐரோப்பிய நேரம் பிற்பகல் 3:00 மணிவரை 79 கிலோமீற்றர்கள் தூரம் பிரான்ஸில் நடந்து சென்றுள்ளார்.

 

சிவந்தன் பிரான்ஸ்
தலைநகர் பரிஸ் நகரைச் சென்றடைய இன்னும் 223 கிலோமீற்றர்கள் இருப்பதுடன் அங்கிருந்து ஜெனீவா நோக்கி 600 கிலோமீற்றர்களுக்கு மேல் நடந்து செல்ல வேண்டியுள்ளது.

 

பிரான்ஸ் மக்கள் நேற்று அவரது நடை பயணத்துடன் இணைந்து உற்சாகம் கொடுத்தது போன்று 0033 66 49 79 490 எனும் தொலைபேசி இலக்கத்துடன் தொடர்புகொண்டு அவர் நடந்து செல்லும் இடத்தைக் கேட்டறிந்து அவருடன் தொடர்ந்து இணைந்துகொள்ள வேண்டும் எனவும், உற்சாகமளிக்க வேண்டும் எனவும் ஐரோப்பிய தமிழ் அமைப்புக்கள் தொடர்ச்சியாகக் கோரிக்கை விடுத்து வருகின்றன.

 

மனித உரிமை செயற்பாட்டாளருடனான நேர்காணல்;

Interview with Mr jay aiyathurai

பாவனையாளர்

We have 61 guests online