தடுத்து வைக்கப்பட்டுள்ள தமிழ் இளைஞர்களில் 737 பேர் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர். PDF Print E-mail
Thursday, 29 July 2010 07:17

விடுதலைப் புலி உறுப்பினர்கள் என்ற சந்தேகத்தின் பேரில் தடுத்து வைக்கப்பட்டிருப்பவர்களில் 737 பேர் கடுமையான தீவிரவாதிகள் என அடையாளம் காணப்பட்டு இவர்கள் ஏனையவர்களில் இருந்து தனிமைப்படுத்தப்பட்டுள்ளதாக சிறிலங்கா பாதுகாப்பு அமைச்சின் இணையத்தளம் செய்தி வெளியிட்டுள்ளது.

பாரிய குற்றங்களை இழைத்ததற்கான ஆதாரங்கள் இவர்களுக்கு எதிராக இருப்பதாகவும் இவர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

புனர்வாழ்வு ஆணையாளர் சுதந்த ரணசிங்கவை மேற்கோள் காட்டி வெளியிடப்பட்ட இந்தச் செய்தியில் மொத்தம் 7948 பேர் தற்போது தடுத்து வைக்கப்பட்டிருப்பதாகத் தெரிவிக்கப்பட்டிருக்கிறது.

சுமார் 12,000 வரையிலான தமிழ் இளைஞர்கள் தடுத்து வைக்கப்பட்டிருப்பதாக செய்திகள் வெளியாகி வந்த நிலையில் திடீரென சுமார் 8,000 பேரே தடுத்து வைக்கப்பட்டிருப்பதான அறிவிப்பு ஏனைய இளைஞர் யுவதிகளுக்கு என்ன நடந்தது என்ற அச்சத்தை ஏற்படுத்தி இருக்கிறது.

இதனிடையே விடுதலைப் புலிகளின் அரசியற் பிரவு முக்கியஸ்தர்களான யோகரத்னம் யோகி மற்றும் பாலகுமாரன் ஆகியோர் தடுத்து வைக்கப்பட்டிருப்பவர்களில் இல்லை எனவும் அந்தச் செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

 

மனித உரிமை செயற்பாட்டாளருடனான நேர்காணல்;

Interview with Mr jay aiyathurai

பாவனையாளர்

We have 64 guests online