| பாலகுமார் மற்றும் யோகி தடுப்புக் காவலில் இல்லை - சிறிலங்கா அரசாங்கம் கைவிரிப்பு. |
|
|
|
| Thursday, 29 July 2010 07:37 |
|
கடந்த மே மாத காலப் பகுதியில் படையினரின் கட்டுப்பாட்டுப் பகுதிக்குள் வந்தபோது படையினரால் கைது செய்யப்பட்ட இவர்கள் யுத்த நெறிமுறைகளை மீறி படுகொலை செய்யப்பட்டு இருக்கலாம் எனச் சந்தேகம் தெரிவிக்கப்பட்ட நிலையில் இந்த அறிவிப்பு வெளியாகியுள்ளது. தடுப்புக்காவலில் உள்ள போராளிகளுள் பாலகுமாரன் மற்றும் யோகி ஆகியோர் இல்லையென சிறிலங்காவின் புனர்வாழ்வு ஆணையாளர் சுகந்த ரணசிங்க ஆங்கில ஊடகம் ஒன்றிற்கு வழங்கிய பேட்டியில் தெரிவித்து இருக்கிறார். அரசாங்கத்தின் பொறுப்பு வாய்ந்த அதிகாரி ஒருவரின் இந்தப் பதில் சிறிலங்காப் படைகளின் யுத்த நெறிமுறை மீறல்களை உறுதிப்படுத்துவதாக சுட்டிக் காட்டப்பட்டுள்ளது. யோகி, மற்றும் பாலகுமாரன் தொடர்பாக இவ்வாறான அறிவிப்பு வெளியாகி உலகத்ததிழர்களை அதிர்ச்சிக்கு உள்ளாக்கியுள்ள நிலையில் முக்கிய மூத்த உறுப்பினர்களான பேபி சுப்பிரமணியம், புதுவை இரத்தினதுரை ஆகியோருக்கு என்ன நடந்தது என்ற கேள்வி உலகத்தமிழர்களின் மனங்களில் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது. |








தமிழீழ விடுதலைப்புலிகளின் முக்கிய மூத்த உறுப்பினர்களில் ஒருவரான யோகி, மற்றும் அரசியல் நடவடிக்கைகளை முன்னெடுத்த பாலகுமாரன், ஆகியோர் தடுப்புக் காவலில் இல்லை என சிறிலங்கா அரசாங்கம் மீண்டும் கைவிரித்துள்ளது. 






