இதற்கமைய பல குழுக்களாக பிரிந்து ஆளுக்கொரு துருப்புச்சீட்டை கையில் எடுத்தவாறு தமிழரின் பிரதிநிகள் நாங்கள் என பேச்சளவில் சொல்லித்திரிவதை தவிர்த்து இதய சுத்தியுடன் தமிழர் தரப்பு பிரச்சனைகளை கையாண்டு மக்களின் விருப்பிற...
பிரபாகரனுடன் முன்னாள் முதல்வர் மறைந்த எம்.ஜி.ஆர். இருக்கும் சுவரொட்டி மதுரை முழுவதும் ஒப்பட்டப்பட்டுள்ளதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. முன்னாள் முதல்வர் எம்.ஜி.ஆர்.ரின் நினைவு தினத்தையொட்டி மதுரையில் நாம் தமிழர் இயக்கத்தி...
எனவே தலைவர் பிரபாகரனின் இருப்பு பல துயரங்களினூடாக அழிவுகளினூடாக மீண்டும் மீண்டும் உறுதிப்படுத்தப்பட்டுக் கொண்டேயிருக்கிறது – அது உறுதிப் படுத்தப்பட்டுக் கொண்டேயிருக்கும். இதை யார் புரிகிறார்களோ இல்லையோ தமிழர்கள் பு...
பல்லாயிரக் கணக்கானோரைக் காவுகொண்ட ஆழிப்பேரலையின் ஐந்தாம் ஆண்டு நினைவு நாளான இன்று தேசிய பாதுகாப்புத் தினமாகப் பிரகடனப்படுத் தப்பட்டுள்ளது. ஆழிப்பேரலையால் காவு கொள்ளப்பட்டவர்களை நினைவுகூரும் வகையில் நாடளாவிய ரீதியில...
இது மட்டுமல்லாது இறுதி யுத்தத்தின் பின்னர் வன்னியிருந்து இடம் பெயர்ந்த மக்களை அடைப்பதற்காக அகதி முகாம்களை உருவாக்கவென மதவாச்சி – மன்னார் வீதியில் செட்டிகுளம் பிரதேசத்தில் ஏ14 வீதிக்கும் அதன் மேற்குப் புறத்தில் உள்ள அரு...
இன்றைய உலக ஓட்மானது முடிக்குரிய ஆட்சியிலிருந்து மக்களாட்சிக்கு மாறியது. இந்த மக்களாட்சியானது எண்ணிக்கை கணக்கில் எவர் அதிகம் பெறுகிறாரோ அவேரே அந்த அந்த நாடுகளின் ஆட்சி அமைக்கும் உரிமையையும் வழங்கி நிற்க்கின்றது. அந்த உ...
மஹிந்த சமரசிங்க பேராசிரியர் பீரிஸ், பேராசிரியர் ரஜீவ விஜயசிங்க ஆகிய இரண்டு புத்திசாலிகளையும் அவசரப்படவேண்டாம் என கூறியுள்ளாராம்.
தானும், உயிரிழந்தவர்களும் கேணியின் படியில் இருந்த வேளையில் அங்கு வந்த இருவர் திடீரென தாக்குதல் நடத்தினர் என்றும் பின்னர் அவர்கள், அவர்கள் இருவரையும் கேணிக்குள் தள்ளிவிழுத்தினர் என்றும் அவ்வேளை தான் அங்கிருந்து ஒடித் த...
இத்தகைய நான்கு முக்கிய அம்சங்களையும் அடிப்படையாகவும், பிரதான ஆவணங்களாகவும் வைத்துக்கொண்டு உள்நாட்டில் தயாரான தீர்வுத் திட்டம் ஒன்றை எட்டுவதற்கு முயற்சிக்கலாம் என்று நேற்றைய சந்திப்பில் இணங்கப்பட்டதாகவும் அறிய வந்தத...
சிறிலங்கா அரசஅதிபர் தேர்தலுக்கு முன்னதாக (ஜனவரி 26ம் நாளுக்கு முன்), இரகசிய முகாம்களில் தடுத்து வைக்கப்பட்டிருக்கும் பெரும்பாலான முன்னாள் போராளிகளைப் படுகொலை செய்வதற்கு சிறிலங்கா இராணுவப் புலனாய்வுப் பிரிவு திட்டமிட்ட... 
ஈழத்தில் சகோதர யுத்தமும் - உண்மைநிலையும்!
ஒவ்வொரு தடைவையும் ஈழத்தமிழர் பிரச்னையின் பொழுது தன்னுடைய இயலாமையை மறைத்துக்கொள்ள கருணாநிதியால் பாவிக்கப்படும் ஒரு வசனம் சகோதர யுத்தம் என்கிற வசனம்தான். அதாவது விடுதலைப்புலிகள் செய்த சதோதர யுத்தத்தினால்தான் ஈழத்தமிழர்களின் இன்றைய நிலைமைக்கு காரணம் என்பது போலவே அவரது கருத்துக்கள் அமைந்திருக்கும் அது மட்டுமல்ல இன்னமும் தமிழகத்து தமிழர்களும் ஏன் தமிழகத்தின் பிரபல பத்திகைகள் கூட புலிகள்தான் வேண்டுமென்றே மற்றைய சகோதர இயக்கங்களை அழித்து விட்டனர் என்கிற ஒரு தவறான கருத்தையே கொண்டிருப்பதையும் காணலாம். சகோதர யுத்தம்உண்மையில் என்ன நடந்தது என்பதனை தமிழகத்து உறவுகளிற்கும் புலம்பெயர்ந்த தமிழர்களின் இளையசமூதாயத்தினரிற்கும் முடிந்தளவு புரிய வைப்பதே என்னுடைய இந்தக்கட்டுரையாகும்.
சகோதர யுத்தம் பற்றி விரிவாக எழுதுவதானால் பல பக்கங்கள் தேவை எனவே சுருக்கமாக இரண்டு பாகங்களாக எழுத முயற்சிக்கிறேன். புலிகள் அமைப்பிலிருந்து முரண்பாடுகள் காரணமாக அதன் மத்திய குழுவிலிருந்து உமா மகேஸ்வரன் வெளியேற்றப்பட்டதும்.பின்னர் அவர் புதியபாதை என்னும் குழுவின் தலைவர் சுந்தரத்துடன் இணைந்து புளொட்(P.L.O.T )என்னும் அமைப்பினை தொடங்கி அதற்கு தலைவரான பின்னர். தமிழ்நாடு பாண்டிபஜாரில் பிரபாகரனிற்கும் உமா மகேஸ்வரனிற்கும் இடையில் நடந்த துப்பாக்கிச்சூட்டு சம்பவமே அன்றைய காலகட்டத்தில் பெரியதொரு சகோதர யுத்தமாகக் கருதப்பட்டது. ஆனால் அந்தச் சம்பவம்தான் இந்திய மத்திய அரசிற்கு ஈழவிடுதலைப்போராட்ட இயக்கங்ளுடனான தொடர்புகள் அமையவும் காரணமாயிருந்தது.
ஆனால் காலப்போக்கில் புளொட் அமைப்பில் ஏற்பட்ட உள் முரண்பாடுகளினால் அந்த இயக்கதினர் தாங்களே ஒருவரையொருவர் அடித்துக்கொண்டும் அழித்துக்கொண்டும் இறுதியாய் புளொட் உறுப்பனராலேயே அதன் தலைவர் உமாமகேஸ்வரனும் கொல்லப்பட்டுவிட்டார் ( இது பலருக்கும் தெரியாத உண்மைச்சம்பவம் ). ஆனால் கருணாநிதியும் வேறுசிலரும் சகோதர யுத்தம் என்று சொல்லிக்கொண்டிருப்பது ரெலோ(T.E.L.O )இயக்கத்தினை புலிகள் தடைசெய்ததனையே . இந்தியா உதவியும் பயிற்சியும் கொடுத்து வளர்த்த இயக்கங்களில் புலிகள் இந்தியா எமக்கு தமிழீழம் பெற்றுத்தரும் என்று கண்மூடித்தனமாக நம்பவில்லை அதேபோல இந்தியாவும் புலிகள் தாங்கள் சொல்வதெற்க்கெல்லாம் பிரபாகரன் தலையாட்டுவார் என்று நம்பவுமில்லை. இதனால் புலிகளிற்கும் இந்திய உளவுத்துறைக்கும் ஆரம்பகாலங்களிலிருந்தே ஒருவித பனிப்போர் நடந்துகொண்டேயிருந்தது. அதே நேரம் பிரபாகரளை தங்கள் தலையாட்டிப்பொம்மையாக்கியே தீருவது என்று கங்கணம்கட்டிக்கொண்டு இந்தியாவிலிருந்த புலிகளின் பயிற்சி முகாம்களை பலவந்தமாக மூடியும்.ஆயுதங்களை பறித்தும். புலிகளின் தொலைத்தொடர்பு கருவிகளை பறித்தும்.அன்ரன் பலசிங்கத்தை நாடு கடத்தியும் தொடர்ந்து பலவித நெருக்கடிகளை கொடுத்துவந்தனர்.
ஆனால் றோ அதிகாரிகள் எள் என்றதும் எண்ணெயாகி அவர்கள் உச்சந்தலையிலே உருகிவழிந்த ரெலோ தலைவரிற்கு வேண்டிய வசதிகளை றோ அதிகாரிகள் செய்தது மட்டுமல்ல . எண்பதுகளில் தமிழ்சினிமாவில் உச்சத்திலிருந்த இரண்டு பிரபல நடிகைகளையும் கொடுத்து மாமாவேலையும் செய்தனர். இப்படி சிறீசபாரத்தினத்தை தங்கள் பிடிக்குள்ளேயே வைத்திருந்துகொண்டு தமிழீழத்திலும் புலிகள் அமைப்பிற்கு றோ அமைப்பு நெருக்கடிகளை கொடுக்கத்தொடங்கியது.
இப்படி இந்தியாவின் செல்லப்பிள்ளையாய் மாறிவிட்ட சிறீசபாரத்தினத்தின் போக்கு பிடிக்காமல் ரெலோ அமைப்பின் முக்கிய இராணுவத் தளபதியாக இருந்த தாஸ் என்பவர் இயக்கத்திலிருந்து பிரிந்து போய்விடுவதென முடிவெடுத்தபொழுது அவரையும் அவரது முக்கியமான நண்பர்கள் 5 பேரையும் பேச்சுவார்த்தை நடத்தலாம் வாருங்களென்று அழைத்து யாழ் வைத்திய சாலையில் வைத்து ரெலோ அமைப்பினரே சுட்டுக்கொன்றார்கள். அதனை புலிகள் செய்தார்கள் என்று பிரச்சராப்படுத்தியது. அதே நேரம் புலிகளை எப்படியாவது வம்புச்சண்டைக்கிழுத்து புலிகளை அழித்துவிடும் றோவின் திட்டத்திற்கு சரியான சந்தர்ப்பம் பார்த்திருந்த ரெலோவும் ஈழத்தில் தாவடிப்பகுதியில் தமிழ்பாராழுமன்ற உறுப்பினர்களாகிய ஆலால சுந்தரம். மற்றும் தர்மலிங்கம் ஆகியோரை சுட்டுகொன்று விட்டு அதனையும் புலிகள் செய்தார்கள் என்று பிரச்சராப்படுத்தியது.
தொடச்சியாய் பலகொள்ளைகளை நடத்திக்கொண்டிருந்த (முக்கியமாக வாகனக்கொள்ளைகள்) ரெலோ உறுப்பினர்களிற்கு இடைஞ்சலாயிருந்த புலிகள் அமைப்பு. இதனால் இரவு நேரக்காவல் கடைமையில் ரோந்து வரும் புலிகள் அமைப்பினரை கடத்துவது. துன்புறுத்துவது என்று தொடருந்து கொண்டிருந்ததபொழுது அவர்கள் எதிர்பார்த்த சர்ந்தர்ப்பமும் வந்தது. .......86 ம் ஆண்டு புலிகளிற்கும் இலங்கைக் கடற்படைக்கும் நடந்த ஒரு மோதலில் புலிகளின் தளபதியாகவிருந்த அருணாவும், தெய்வாவும் வேறு சிலரும் இறந்து போய்விட்ட செய்தியறிந்து (அருணா அந்தத் தாக்குதலில் இறந்திருக்கவில்லையன்பது பின்னர்தெரியவந்ததோடு கடற்படையினரால் கைது செய்யப்பட்டு பல வருடங்கள் சிறையில் சித்திரவதைக்குள்ளாக்கப்பட்டு பின்னர் விடுதலைப்புலிகளுக்கும் ஸ்ரீலங்கா இராணுவத்துக்குமிடையிலான போர்க்கைதிகள் பரிமாற்றத்தின் போது விடுதலையாகி அதன் பின்னரும் விடுதலைப்புலிகள் இயக்கத்தில் சிலவருடங்கள் போராளியாக இருந்து வீரமரணம் அடைந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது)
பொதுமக்கள் யாழ்குடாவெங்கும் வாழை தோரணம் கட்டி இறந்த போராளிகளின் உருவப்படங்களிற்கு அஞ்சலி செலுத்திக்கொண்டிருந்தனர். அருணாவின் ஊரான கல்வியங்காடுதான் சிறீசபாரத்தினத்தின் ஊருமாகும். கல்வியங்காட்டிலும் மக்கள் தோரணங்கள் கட்டி அருணாவின் உருவப்படங்களை வைந்து அஞ்சலி செலுத்திக்கொண்டிருந்தவேளை அங்கு வந்த ரெலோ உறுப்பினர்கள் தோரணங்களை அறுத்தெறிந்து உருவப்படங்களையும் கிழித்தெறிந்து பொது மக்களையும் தாக்கியபொழுது அந்த இடத்திற்கு சென்று அவற்றை தடுக்க முயன்ற புலிஉறுப்பினர்களான முரளி என்பவரையும் மூத்த உறுப்பினரான பசீர்காக்காவையும் பலவந்தமாய் அடித்து இழுத்துச்சென்று தங்கள் முகாமில் அடைத்துவிட்டார்கள். இதெல்லாம் நடந்து கொண்டிருக்கும் பொழுது சிறீசபாரத்தினம் அதேகல்வியங்காட்டிலுள்ள முகாமில்தான் இருந்தார். முரளியையும் காக்காவையும் அடைத்து வைத்து விட்டு அவர்களை மீட்க எப்படியும் புலிகள் தாக்குதலிற்கு தயாராக வருவார்கள் அவர்கள் மீது தாக்குதலை தொங்கி அப்படியே தொடர்ச்சியாய் புலிகளை அழித்துவிடலாமென்கிற திட்டத்துடன் ரெலோ அமைப்பினர் தாக்குதலிற்கு தயாரான நிலையிலேயே இருந்தனர். ஊர் நிமைமைகள் அன்றைய புலிகளின் யாழ் மாவட்ட தளபதியான கிட்டு உடனடியாக தலைமைக்கு தெரியப்படுத்தபட்டு முரளியையும் காக்காவையும் ஒரு தாக்குல் மூலம் மீட்கலாமா அல்லது பேச்சுவார்த்தைமூலம் தீர்க்கலாமா என ஆலோசனை கேட்டிருந்தார்.
பிரபாகரனும் நிலைமைய சிக்கலாக்கமால் பேசித்தீர்க்கலாமென்கிற முடிவுடன் பேச்சு வார்த்தைக்கு கிட்டுவை அனுப்பாமல் அப்பொழுது தமிழ்நாட்டின் மதுரை மாவட்ட புலிகளின் அலவலகத்திலிருந்த மூத்த உறுப்பினரும் சிறீசபாரத்தினத்திற்கு நன்கு பழக்கமான லிங்கத்தினை சிறீசபாரத்தினத்துடன் பேசுவதற்காக அனுப்பிவைத்தார். காரணம் கிட்டு கொஞ்சம் கோபக்காரர்.இப்படியான சந்தர்ப்பங்களில் அமைதியாகப்பேசமாட்டார். ஆனால் லிங்கம் எப்படிப்பட்ட சிக்கலான நிலைமையிலும் கோபப்படாமல் அமைதியாக பேசிகோபத்திலிருப்பவர்களையும் அமைதியாக்கி விடுவார். அதனால்தான் அவரிற்கு புலிகளின் மதுரை அலுவலகத்தினை நிருவகிக்கும் பொறுப்பு கொடுக்கப்பட்டிருந்தது.
அவசரமாக மாதகலில் வந்திறங்கிய லிங்கம் மேலும் இருவரை அழைத்தகொண்டு ஆயுதங்கள் எதுவுமின்றி கல்வியங்காட்டில் சிறீசபாரத்தினம் இருந்த முகாமிற்கு சென்று அங்கு தன்னை அறிமுகப்படுத்தி சிறீயுடன் கதைக்கவேண்டும் எனகேட்டதுமே லிங்கத்தை நோக்கி துப்பாக்கி சடசடத்தது. லிங்கம் அந்தவிடத்திலேயே இறந்துபோக அவருடன் கூடசென்றவர்களால் லிங்கம் கொல்லப்பட்ட செய்தி கிட்டுவிற்கு அறிவிக்கப்பட்டது.
அதற்கு மேலும் ரெலோவுடன் பேசிப்பயனில்லையென்று தெரிந்துகொண்ட புலிகள் அதிரடியாக ரெலோவின்மீது தாக்குதலைத் தொடுத்து அவர்களால் அடைத்து வைக்கப்பட்டிருந்த முரளியையும் பசீர் காக்காவையும் மீட்டு இறுதியாய் சிறீசபாரத்தினமும் கொல்லப்பட்டதுடன் ரெலோவின் ஆதிக்கம் கட்டுப்பாட்டிற்கு கொண்டுவரப்பட்டது. இங்கு புலிகள் அமைப்பினரைப்போலவே ஆட்பலத்திலும் ஆயுதபலத்திலும் சமமாய் இருந்தவர்கள் எனக்கருதப்பட்ட ரெலோ அமைப்பு புலிகளால் சுலபமாக அழிக்கபட்டதற்கு என்ன காரணங்களென பார்த்தால்.
1)ரெலோ அமைப்பு தனக்கு பின்புலத்தில் இந்தியா இருக்கின்றதென்கிற தைரியத்தில் தன்னுடைய சக்தியை அளவுக்கு மீறியதாக கற்பனை செய்து கொண்டதனாலும் . அவர்களது அடாவடித்தனங்கள் அதிகரித்தமையாலும்.உதாரணமாக யாழ்குடாநாட்டில் ஒரு வீட்டிலாவது ஒரு வாகனம் உருப்படியாய் நிற்க முடியாது முக்கியமாய் மோட்டார்சைக்கிள்கள். அவற்றை உடனேயே கடத்திக்கொண்டு போய்விடுவார்கள் அவற்றை தமிழ்நாடுவரை கொண்டு சென்று அங்கு பெரும்பணக்காரர்களிற்கு விற்றுவிடுவார்கள். அடுத்தது தொடர்ச்சியாய் பல கொள்ளைகள். இதனால் மக்கள் மனங்களிலிருந்து அன்னியப்படத்தொடங்கினர்.
2) புலிகளுடனான மோதலை வழிநடத்த சரியான அனுபவமுள்ள ஒரு வழிகாட்டி இல்லாததும் ஒருகாரணம். அத்தோடு மிக முக்கியகாரணமாக அமைந்தது அவர்களிடமிருந்த தாக்குதல்களை வழிநடத்துவதில் சிறந்தவர்களான தாஸ் மற்றும் காளியையும் அவர்களே யாழ்வைத்திய சாலையில் வைத்து சுட்டுக்கொன்று தாங்களே தங்கள் தலையில் மண்ணள்ளிப்போட்டுக்கொண்டதே. அது மட்டுமல்ல அதந்தச் சம்பவத்திற்கு எதிர்ப்புத் தெரிவித்து பொது மக்கள் நடாத்திய ஊர்வலத்திலும் பகிரங்கமாக கண்மூடித்தனமாக சுட்டதிலும் ஒருவர் இறந்து போனது மக்களிற்கு ரெலோ மீதான கோபத்தினை அதிகரித்திருந்தது.
3) புலிகளிடம் இருந்த அளவு ஆயுத ஆட்பலம் இருந்திருந்தாலும் ரெலோ அமைப்பிடம் தொலைத்தொடர்பு வசதிகள் இருக்கவில்லை . அதனால் அவர்களால் உடனுக்குடன் தலைமைக்கும் மற்றவர்களிற்குமிடையினாலான செய்திகளை பரிமாறிக்கொள்ள முடியாமல் பல குழுக்களாக தனித்துப்போயிருந்தனர்.
4)புலிகளுடனான சண்டை தொடங்கியதும் அதனை முன்னின்று வழிநடத்தாமல் தான் எப்படியாவது தப்பித்து தமிழ்நாட்டிற்கு ஓடிவிட்டால் போதுமென்கிற நினைப்பில் சிறீ சபாரத்தினம் தலைமறைவாகியதும் மற்றைய ரெலோ அமைப்பினரிற்கு ஒரு சலிப்பை கொடுத்தது. அவர்களும் தாங்களும் ஆயுதங்களை போட்டு விட்டு எப்படியாவது தப்பியோடி விடலாமென முடிவெடுத்து ஈ.பி.ஆர்.எல்.எவ். மற்றும் புளொட் இயக்க முகாம்களில் ஓடி ஒழிந்து கொண்டது.
5) எல்லாவற்றிற்கும் மேலாக அன்றைய காலகட்டத்தில் புலிகளும் ரெலோவும் இராணுவ ரீதியில் சமபலத்துடன் இருந்ததாகவே பலரும் எண்ணினர். ஆனால் ரொலோ அமைப்போ தாங்கள் புலிகளைவிட பலமாக இருப்பதாகவே எண்ணினர். அவர்களின் இந்த எண்ணம்தான் புலிகளை தொடர்ச்சியாய் வலுச்சண்டைக்கு இழுக்கக் காரணமாயிருந்தது. ஆனால் புலிகள் ஆரம்பம் முதற்கொண்டு இன்று வரை தங்கள் முழுமையான ஆயுத இராணுவபலம் இதுதானென்று வெளியில் காட்டிக்கொண்டதேயில்லை. அதுமட்டுமல்ல புலிகளின் யுத்தஅனுபவங்களும் அவர்களின் ஆன்ம பலமும்தான் வழைமைபோல ரெலோவுடனான யுத்தத்திலும் வெற்றிபெறவைத்தது.
இவ்வாறான பல உண்மைநிலையையும், அனுபவங்களையும் கருத்தில் கொண்டு நான் பெரிது நீ பெரிது என்று வாழாமல் நம் நாட்டின் விடுதலைக்கும் மக்களின் சுதந்திர வாழ்வுக்கும் அனைவரும் ஒன்றுபட்டு செயற்பட வேண்டியதே இன்றைய தேவை. எத்தனை கட்சிகள் இருப்பினும் அவை அனைத்துக்கும் சிங்கள இனவாத அரசிற்கும் அதன் செயற்பாடுகளுக்கும் எதிரானதாகவே இருக்கவேண்டுமே தவிர ஒருவரை ஒருவர் தமக்குள் குத்துப்படுவது தவிர்க்கப்படவேண்டியது. இவ்வாறு அனைவரையும் உள்வாங்கி செயற்பட்டால் தமிழரின் சுதந்திர வாழ்வு உறுதிசெய்யப்படும். சுதந்திர தமிழீழம் மலரும்.-ஈழப்பிரியன்-
Read more... 
 
புதிய அரசியல் கூட்டணிகளால் மாற்றங்கள் ஏற்பட வாய்ப்புண்டா???
"மக்கள் கருத்து பிரதிநிதித்துவப்படுத்தப்படுதலும் நிலையானதொரு அரசு உருவாக்கப்படுதலும் துலாக்கோலிடப்படும் விதமாக நாடாளுமன்றத் தேர்தல் முறைமை மறுசீரமைக்கப் படுவதற்கான யோசனையை முன்வைக்கிறேன். நிறைவேற்று அதிகார ஜனாதிபதித் பதவி இல்லாதொழிக்கப்படுவது மற்றும் நாட்டின் ஏனைய பிரச்சினைகளுக்கும் கூடத் தீர்வுகள் வழங்கப்படுவதான புதிய அரசமைப்பொன்றை அனைவரதும் இணக்கப்பாட்டுடன் முன்வைக்கும் எதிர்பார்ப்பையும் கொண்டுள்ளேன். அதுவரையில், ஜனாதிபதியென்பவர் நாடாளுமன்றத்துக்குப் பொறுப்புக்கூறும் விதத்திலான அரசமைப்புக்கான மறுசீரமைப்புகளை முன்வைப்பேன்.''
தற்போது மீளவும் தேர்தல்களுக்கான புறச்சூழல் நாட்டில் உருவாகி வருகிறது. 2004 ஆம் ஆண்டில் நிர்வாக அதிகாரத்தைப் பெற்றுக்கொண்ட நாடாளுமன்றத்தின் பதவிக்காலம் எதிர்வரும் 2010 ஆம் ஆண்டின் ஏப்ரல் மாதத்துடன் முடிவடையவுள்ளதால் நியாயமாகவும் விதிமுறைக்கமை வாகவும் செயற்படுவதானால், இடம்பெற வேண்டியுள்ளது பொதுத் தேர்தலொன்றேயாகும். இருந்தபோதிலும், 2009 ஆம் ஆண்டின் நவம்பர் மாதத்தில் தனது பதவிக்காலத்தின் முதல் நான்காண்டுகளையும் நிறைவு செய்துகொள்ளும் ஜனாதிபதி தற்போது, ஜனாதிபதித் தேர்தலொன்றை நடத்தி எஞ்சியுள்ள எட்டாண்டுகளுக்குமான தனது அதிகார பலத்தை உறுதிப்படுத்திக் கொள்வதற்கு முனைப்புடன் செயற்படுகிறார் என தகவலறிய முடிந்துள்ளது. தாம் ஈட்டிக் கொண்டுள்ள யுத்த வெற்றியின் ஒளிப்பிரவாகம் முற்றாக மங்கி, அடங்கி, அடிபட்டுப் போவதற்கு முன்னர் தனது பதவி நிலையைத் தக்கவைத்துக் கொள்வது போன்றே, தமக்கிருக்கும் மக்கள் செல்வாக்கின் மூலம் கரைசேர்ந்துவிடும் எதிர்பார்ப்புடன் பார்த்திருக்கும் நாடாளுமன்ற உறுப்பினர்கள், அமைச்சர்களென்ற தரப்பினரிடையில் எதிர்கால அரசொன்று தொடர்பாக தமக்குக் கீழ்ப்படிவான தரப்பினரைத் தேர்ந்தெடுத்துக் கொள்வதுமே ஜனாதிபதித் தேர்தலின் நோக்காகியிருப்பதாகப் புலப்படுகிறது.
மறுபுறத்தில், நிறைவேற்று அதிகார ஜனாதிபதி முறைமை இந்நாட்டுக்கு அறிமுகப்படுத்தப்பட்ட 1978 ஆம் ஆண்டின் பின்னர் இடம்பெற்ற முக்கியத்துவம் பெறும் அனைத்து ஜனாதிபதித் தேர்தல்களிலுமே அதை மாற்றமுறச் செய்யும் அவசியம் வலியுறுத்தப்பட்டே வந்துள்ளது.
இன்று உருவாகியுள்ள புதிய நிலைப்பாடாவது, அந்த முறைமையை அறிமுகப்படுத்திய ஐ.தே.கட்சியும் கூட அந்த நிறைவேற்று அதிகார ஜனாதிபதி முறைமைக்கு எதிரான அணியில் கைகோத்துக்கொண்டுள்ளதாகும். அந்த வகையில் நோக்கும்போது இன்று, நிறைவேற்று அதிகார ஜனாதிபதி முறைமைக்குச் சார்பாக நிற்போர் ஒருவர் தானும் இல்லையென்றாகிறது.
செய்து கொள்ளப்படும் உடன்பாடுகள் தேர்தலுக்குப்பின் செயற்படுத்தப்படுமா?
ஆனாலும் அது நடைமுறையிலேயே உள்ளது. நிறைவேற்று அதிகார ஜனாதிபதி முறைமையை மாற்றி விடுவதாகப் பலபல விதங்களில் சத்தியங்கள் செய்து அதிகார பலத்தைக் கைப்பற்றிக் கொண்ட சந்திரிகா குமாரதுங்க மற்றும் மஹிந்த ராஜபக்ஷ ஆகியோருக்கு அதற்கு மனமொப்பவில்லை.
அதன் சுவையை ருசித்து அனுபவித்ததன் பின்னர், மன்னர்கள், மகாராணிகள் வரையிலும் தமது அதிகார பலத்தை விரிவுபடுத்திக் கொள்ளும் ஆசை மேலிட்டதேயன்றி அதைக் கைவிடும் எண்ணமோ காத்திரமோ இருந்ததில்லை ஏற்படவுமில்லை. இன்று, எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் பொது வேட்பாளரொருவரை நிறுத்துவது தொடர்பாக ஐ.தே.கட்சி முனைப்புடன் பேசி வருகிறது. அத்தோடு இலங்கையின் முன்னாள் இராணுவத் தளபதியான ஜெனரல் சரத் பொன்சேகாவை எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலின் பொது வேட்பாளராக முன்நிறுத்திவிடும் முயற்சிகளையும் அது மேற்கொண்டு வருகிறது. அது தொடர்பான அவரது விருப்பு வெறுப்பு பற்றி இன்னமும் எதுவும் தெரியவராதுள்ள போதிலும், ஜே.வி.பி., ஐ.தே.கட்சி மற்றும் மங்கள சமரவீர தரப்பு என்பவை ஜனாதிபதி வேட்பாளராக்கிவிட விரும்புவதாகத் தெரிகிறது.
இவை இவ்வாறிருக்க, 2008 ஆம் ஆண்டு செப்ரெம்பர் மாதம் 23 ஆம் திகதியில் கனடாவின் "நெஷனல் போஸ்ட்" பத்திரிகையுடனான நேர்காணல் உரையாடலொன்றில் இராணுவத் தளபதியான ஜெனரல் சரத் பொன்சேகா வெளிப்படுத்தியிருந்த கருத்துகள் இங்கு நோக்கற்பாலதாகும். அதாவது, ""எனது தீர்க்கமான நம்பிக்கைக்கு அமைய, இந்த நாடு சிங்களவர்களுக்கே உரித்துடையதாகும். சிறுபான்மையினச் சமூகங்களும் வாழ்ந்தாலும் கூட, நாம் அவர்களை எம்மவர்களாகவே கருதுவோம். நூற்றுக்கு 75 வீதமான பெரும்பான்மையைக் கொண்டுள்ள நாம் அடிபணிந்து செல்லத் தயாரில்லை என்பதோடு, எமக்கு இந்த நாட்டைப் பேணிப் பாதுகாத்துக்கொள்ளும் உரிமை உள்ளது. நாம் பலம்மிக்கதொரு இனமாவோம். அவர்களுக்கு எம்முடன் இந்நாட்டில் வாழ முடியும். இருந்தபோதிலும் சிறுபான்மைத் தரப்பொன்றான அவர்கள் ஒவ்வாத கோரிக்கைகளை கோராதிருக்கவேண்டியுள்ளது.''
இனங்களின் பிரச்சினையைப் பொறுத்தவரையிலும் ஜாதிக ஹெல உறுமய போன்ற கடும் சிங்களப் பேரினவாதக் கட்சியொன்றுக்கும் அப்பால் செல்லும் நிலைப்பாட்டைக் கொண்டுள்ள ஜெனரல் சரத் பொன்சேகா உண்மையிலேயே சிங்கள மேலாதிக்கவாத அரசியலின் இன்றைய தலைமைத்துவத்துக்கு கடும் சவாலொன்றாகவே அமையக்கூடும். இருந்தபோதிலும் நாட்டின் சனத்தொகையில் 24 வீதம் வரையிலான சிங்களவர்களல்லாத மக்கள் மேற்குறிப்பிட்ட கருத்து நிலைப்பாட்டைக் கொண்டுள்ள ஒருவருக்கு எவ்விதத்திலான பிரதிபலிப்பை வெளிப்படுத்தி நிற்கக் கூடுமென்பது சிக்கலுக்குரிய தொன்றேயாகும். 2005 இல் விடுதலைப் புலிகள் அமைப்பின் மூலம் மேற்கொள்ளப்பட்ட தமிழ் மக்களின் வாக்குகள் செலுத்தப்படாத அந்த வாக்குப் பகிஷ்கரிப்புத்தடை ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் வெற்றிக்குப் பங்களிப்பு வழங்கியிருந்தமை எவ்வாறானதோ சிறுபான்மைச் சமூகங்களின் பிரிதிபலிப்பும் எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் முக்கியத்துவம் பெறக்கூடும்.
இலங்கையின் இன்றைய அரசியல் களம் பயணித்துச் செல்லும் திசையைக் கவனத்தில் கொள்ளும்போது அரச தரப்புக் கட்சியைப் போன்றே நாட்டின் பிரதான எதிர்க்கட்சியும் கூட சிறுபான்மையினச் சமூகங்களிடமிருந்து வேகமாக விலகிச் செல்வதைப் புரிந்துகொள்ள முடிகிறது. தெற்கின் நிலைப்பாட்டை நோக்கும்போது, நூற்றுக்கு மூன்று வீதமான முஸ்லிம் மக்கள் வாழும் பிரதேசங்கள் அங்கிருந்தாலும் கூட, தென்மாகாண சபைக்கு எந்தவொரு முஸ்லிம் மாகாணசபை உறுப்பினரும் தெரிவாகியிருக்கவில்லை. அந்த வகையில், தென்புலத்தில் முழுமையான சிங்களமய பிரதிநிதித்துவமும் நடிகை அனார்க்கலி ஆகர்ஷாவைத் தவிர வேறு எந்தவொரு மகளிர் பிரதிநிதித்துவமும் அற்ற சிங்கள ஆணாதிக்க பிரதிநிதித்துவமும் கொண்டதே தென்மாகாண சபையாகும்.
இலங்கைக்குக் கூட்டு முன்னணிகள் மற்றும் பொது வேட்பாளர்கள் எதற்காக அவசியப்படுகின்றனர் என்பது குறித்து அலசல்களை மேற்கொள்வதற்கு இது பொருத்தமானதொரு புறச்சூழலாகும். தேசிய ஒருமைப்பாடு தொடர்பாக மிகப் பெரும் தடைக்கல் என சில தரப்புகளால் அடையாளப்படுத்தப்பட்ட விடுதலைப் புலிகள் அமைப்பு தோற்கடிக்கப்பட்டதன் பின்னர், இலங்கையில் நிர்வாகத்துக்கு வரும் சிங்களத் தலைவர்கள் கட்டாயமாகக் கொண்டிருக்க வேண்டிய இலட்சணமாவது, இனங்களுக்கிடையில் ஒருமைப்பாட்டைக் கட்டியெழுப்பும் திறனாற்றலேயாகும். அது, அமையாதவிடத்து நாட்டில் யுத்தமும் இல்லாத சமாதானமுமற்ற சூன்ய நிலை மென்மேலும் நீடித்துச் செல்வதாகவே இருக்கும். அதேபோன்று, யுத்தத்தின் காரணமாக இந்நாட்டிலிருந்து ஒதுக்கி ஓரம்கட்டி வைக்கப்பட்டுள்ள ஜனநாயகவாத வாய்ப்பை விரிவுபடுத்தல் மற்றும், மனித உரிமைகள் நிலைப்பாட்டை மேம்படுத்தல், ஊழல் சீர்கேட்டுக்கு வேலி போடுதல், சர்வதேச அரசியலில் துன்மார்க்க இராச்சியம் எனக் கொள்ளப்படும் இலங்கையை அந்த நிலைப்பாட்டினின்றும் மீட்டெடுப்பதும் எதிர்கால நிர்வாகி யொருவரால் நிறைவேற்றி முடிக்கவேண்டியுள்ள கருமங்களாகும். நிறைவேற்று அதிகார ஜனாதிபதி முறைமையை இல்லாதொழிப்பதென்பது அதன் ஓர் அம்சம் மட்டுமேயாகும். சிறுபான்மை இனங்களுக்கு மற்றும் மத ரீதியிலான குல ரீதியிலான சமூகங்களுக்கும், வறுமைப்பட்டோருக்கும் விசேடமாக மகளிருக்கும் கூட நியாயமான வாய்ப்பு கிட்டும் விதத்தில் மறுசீரமைக்கப்படு வது அரசமைப்புத் திருத்தமொன்றின் தலையாய குறிக்கோளாக அமையவேண்டியுள்ளது.
இன்றைய அளவில் இந்நாட்டில் முகிழந்து வருபவை இத்தகைய குறிக்கோள்களை முன்னிலைப்படுத்திக்கொண்ட அரசியல் கூட்டுகள் அல்ல. அதாவது, ராஜபக்ஷ குடும்பம் மற்றும் அதற்கு நெருக்கமானவர்களின் "புதிய வர்த்தகக் குழாமின்" எழுச்சியின் முன்னால் வெட்டுண்டு போகும் அரசின் நாடாளுமன்ற உறுப்பினர்களும் அமைச்சர்களும், எமக்குச் சித்து விளையாட்டுக் காட்டிய மஹிந்தவுக்கு நாமும் சித்துவிளையாட்டைக் காட்டுவோமென சங்கற்பம் கொண்டுள்ள பரம வைரிகளும், ஏதோவொரு அரசில் அதிகாரபலத்தை ருசித்துச் சுவைப்பதற்குத் தருணம் பார்த்துக் காத்திருக்கும் எதிர்க்கட்சியின் அரசியல்வாதிகளும், செங்கொடியைக் கரத்தில் ஏந்திக்கொண்டதன் காரணமாக வாழ்க்கையின் சுபீட்சம் அற்றுப்போனதேயென ஆதங்கப்பட்டுக்கொள்ளும் முதுமையை எட்டி நிற்கும் இடதுசாரிகளும், இனவாதத்துக்கு விரோதம் காட்டி நின்ற பாவத்தின் காரணமாகத் தம்மை நிலைப்படுத்திக் கொள்ளும் வாய்ப்பற்றுப் போனதேயென ஆதங்கமுறும் புத்திஜீவிகள், கலைஞர்கள் மற்றும் செயற்பாட்டாளர்களையும் பறியில் தூக்கிப் போட்டுக்கொள்ளும் தவளைகளைப் போன்று சேகரித்துக்கொண்டு இன்று கட்டமைந்துவரும் கூட்டுகளினால் இந்நாட்டின் பொதுமக்களுக்கு எந்தவொரு நலனும் கிட்டப்போவதில்லை.
நன்றி: உதயன்
Read more... 
 
பிரபாகரனின் இருப்பு மீண்டும் மீண்டும் உறுதிப்படுத்தப்பட்டுக் கொண்டேயிருக்கிறது
இன்று தமிழீழத் தேசியத் தலைவர் மேதகு வே.பிரபாகரன் அவர்களின் 55 ஆவது அகவை காணும் புனித நாள்.
இறுதிக்கட்ட பொரின்போது வீரமரணமடைந்தார் என்று வந்த செய்திகள் அனைத்தும் பொய் என்பதற்கு இன்று பல ஆதாரங்கள் உண்டு. யுத்தகளத்தில் இருந்து மூன்று தினங்களுக்கு முன்னரே அவர் வெளியேறிவிட்டார் என்ற தகவலை இறுதிக்கட்ட போரின்போது நின்ற போராளிகளில் பலர் வெளியிட்டுள்ளனர். ஆகவே அவர் வருவார் என்ற நம்பிக்கை தமிழீழ மண்ணையும், தமிழீழ விடுதலையையும் நேசித்த ஒவ்வொருவரிடமும் தொடர்ந்து அதிகரித்துக் கொண்டே செல்கிறது.
இந்திய சுதந்திரப் போராட்ட வீரர் நேதாஜி சுபாஸ் சந்திரபோசின் போராட்ட வாழ்வைப் படித்து போர்க்களத்தில் நுழைந்த பிரபாகரனின் வரலாறும் நேதாஜியின் கடைசிக்கால வரலாறு போலவே ஆகியிருப்பது ஆச்சரியம் தரும் உண்மையே.
அவருடைய 55 வது பிறந்த தினத்தில் அவர் மறுபடியும் மக்கள் முன் வரவேண்டும் என்ற கோரிக்கையே எங்கும் மேலோங்கி நிற்கிறது. அவர் வரவேண்டும் தமிழினம் மகிழ வேண்டும், தமிழீழம் மலரவேண்டும் என்ற அனைத்துத் தமிழ்மக்களினதும் விருப்பையே நாமும் அவரது பிறந்தநாள் வேண்டுதலாக வேண்டிநிற்கிறோம்.
பிரபாகரன் என்பவர் முந்தோன்றித்தான் மக்களுக்கு நம்பிக்கையூட்ட வேண்டிய ஒருவரல்ல. அவருடைய சக்தி தமிழர் நெஞ்சங்களில் எல்லாம் நிறைந்துள்ளது. ஆகவே மாவீரர்நாளில் பிரபாகரன் உரையாற்றவில்லையே என்று மக்கள் கவலையடைதல் கூடாது. அவர் சிங்கள இனவாதத்தை மட்டுமல்ல, உலக இனவாத வெறுப்பையும் எதிர்கொண்டது மட்டுமன்றி உலகத்தமிழருக்கும் அதை அம்பலப்படுத்தியுள்ளார்.
பிரபாகரன் மக்கள் முன் என்றோ ஒருநாள் நிச்சயம் தோன்றுவார். அவர் இறந்ததிற்கான எந்த தடயங்களோ, சாட்சியங்களோ இன்றுவரை இல்லை. இன்றுவரை இந்தியா கேட்ட சாட்சியங்களையோ அன்றி ஆதாரங்களையோ காட்டமுடியாது தடுமாறி திகைத்து நிற்கிறது சிங்கள அரசு.
தமிழ்நாட்டில் இருந்து இலங்கைக்கு அவசர அவசரமாக கடந்த மே மாதம் இலங்கைக்கு சென்ற தமிழ்நாட்டின் புலனாய்வுத்துறையினர் குழு ஒன்று. தலைவர் பிரபாகரன் இந்தியாவில் கைது செய்யப்பட்டு வைத்திருந்தவேளை அவரிடமிருந்து பெறப்பட்ட கைரேகையை கையோடு எடுத்துச்சென்றிருந்த அந்த குழு பிரபாகரன் என இலங்கை அரசு காட்டிய உடலிலிருந்து அந்த கைரேகை மாறுபடுவதால் அதை உறுதிப்படுத்த முடியாமல் திரும்பிச்சென்று மெளனமாக இருந்தது. அதன் பின்னரே பிரபாகரன் இறந்ததான செய்தியை இந்திய அரசு அமத்தி வாசித்தது.
தர்க்கபூர்வமாகவும், விஞ்ஞானபூர்வமாகவும், ஆதாரங்களுடனும் தலைவர் பிரபாகரனின் மரணம் எந்தத் தரப்பாலும் இன்றுவரை உறுதிசெய்யப்படவில்லை. கண்கட்டு வித்தைகளுடனும் பல மோசடிகளுடனும் அவரது மரணம் ஒரு கனவு போலவே விபரிக்கப்பட்டிருக்கிறது. இந்த கண்கட்டு வித்தைகளையும் மோசடிகளையும் பல தரப்பாலும் கூறப்பட்ட பொய்களையும் புனைவுகளையும் உருவி எடுத்துவிட்டால் அவர் உயிருள்ள மனிதனாக உலாவுவதற்கே வாய்ப்புக்கள் அதிகம்.
குறைந்தபட்சம் மரணமடைந்ததாகக் கூறப்படும் அவரது பிள்ளைகளின் மரமபணுக்களுடனும், கைது செய்து தடுத்து வைக்கப்பட்டிருக்கும் அவரது பெற்றோரின் மரபணுக்களுடனும் அவரது மரபணுக்களை சர்வதேச மருத்துவ நிபுணர்களிடம் கொடுத்து (சிறீலங்கா -இந்திய நிபுணர்களின் ஆய்வு ஏற்றுக்கொள்ள முடியாதது) சுதந்திரமாகவும் பகிரங்கமாகவும் ஆய்வு செய்யப்பட்டு உறுதி செய்யப்படும் பட்சத்தில் நாம் அரவது மரணத்தை ஏற்றுக்கொள்வது குறித்துப் பரிசீலிக்கலாம்.
தன்னால் மட்டுமே இந்த இனத்திற்கு விடுதலையைப் பெற்றுத்தர முடியும் என்று இறுக்கமாக நம்பிய ஒருவராக அவர் இருந்தார். அவர் யாரையுமே நம்பவில்லை. அதனால் தனது உயிர் குறித்து பெரும் அக்கறை கொண்டிருந்தார். தனக்கு ஏதும் நேர்ந்தால் இனம் நடுத்தெருவுக்கு வந்துவிடும் என்பதை அவர் தன்னளவில் உணர்ந்தே செயற்பட்டார். இது எமது போராட்டம் சார்ந்து மிக முக்கியமான விடயம். போராட்டம் தொடர்பான சரி, தவறுகள் மேலெழுந்த புள்ளி இங்குதான் மையம் கொண்டுள்ளது. இதை நாம் கவனமாக உள்வாங்கியிருந்தால் தலைவர் பிரபாகரன் குறித்த சச்சரவுகளுக்கு இடமே இருந்திருக்காது.
ஒருவர் தன்னால்தான் இந்த இனத்திற்கு தலைமை தாங்கமுடியும், தன்னால்தான் இந்த இனத்திற்கு விடுதலையைப் பெற்றுத்தர முடியும், அதற்காக எந்த பெயரையும் தாங்கத் தயாராக இருக்கிறேன் என்ற உளவியலோடு யாரையும் நம்பாமல் ஒரு படையணியைக் கட்டியமைத்து அதைக் கொண்டு அந்த விடுதலையை அடைய எத்தனித்தது என்பது எவ்வளவு பெரிய விடயம். இப்படி ஒரு தலைமை கிடைப்பது அபூர்வம். இப்படி ஒரு தலைமை இனி எமக்கு கிடைக்ப்போவது இல்லை. எனவே இதைக் கெட்டியாகப்பிடித்துக் கொள்வதில்தால் எமது அடுத்த கட்ட அரசியலே இருக்கிறது.
இங்கு ஒவ்வொரு தரப்பும் தமது எதிர்த் தரப்பாகக் கருதி சில போராளிகள் மீது வசைபாடும் அவலம் அரங்கேறி வருகிறது. செ.பத்மநாதன், கஸ்ரோ, தமிழ்ச்செல்வன், பானு, ராம், நகுலன் என்று பட்டியல் நீளமாகக் கிடக்கிறது. உடனடியாக இதை நிறுத்தி ஒருமித்த கருத்திற்கு வருவதற்கு சம்பந்தப்ட்டவர்கள் முயற்சிக்கவேண்டும்.
இல்லையேல் தமிழர்களாகிய நாம் அழிவைநோக்கி நகர எதிரியானவன் இலகுவாக எம்மை அழித்துக்கொள்வான்.
பிரபாகரன் தேடப்பட்ட காலத்தில் இருந்தே மக்கள் மத்தியில் நடமாடிய ஒருவரல்ல. எதிரிகளும், ஆதரவாளரும் அவரைத் தேடிக்கொண்டே இருந்தார்கள். ஆகவே தேடக்கிடைக்காத வைரம் போலவே அவர் வாழ்க்கை அமைந்திருந்தது. வருடத்தில் ஒரு தடவை மாவீரர்நாள் நிகழ்விற்கு அவர் மக்கள் முன் தோன்றிப் பேசுவார். அடுத்த வருடம்வரை அதுதான் அவருடைய பிரதான பிரசன்னமாக இருக்கும். அவருடைய உரை சிங்கள ஆட்சியாளராலும், இந்திய ஆட்சியாளராலும், சர்வதேச சமுதாயத்தாலும் உன்னிப்பாகக் கவனிக்கப்படும். உலகத்தில் அவருடைய உரையைப் போல உன்னிப்பாக நோக்கப்படும் வருடாந்த உரையை நிகழ்த்தும் உலகத் தலைவர்கள் எவருமே இருந்தாக சரித்திரமே கிடையாது. அப்படிப்பட்ட ஆளுமையை வளர்த்துக்கொண்ட உலகின் ஒரேயொரு தலைவராக அவர் இருந்தார். இருக்கிறார்.
பிரிட்டனின் பிரபல ஊடகமான பீ.பீ.சி உலகத்தின் மிகச்சிறந்த கெரில்லாப்படை வீரனாக அவரையே தேர்வு செய்தது இங்கு குறிப்பிடத்தக்கது. போராட்டக்களத்தில் இருந்த ஒரு படையணி பெருந்தொகையான கப்பல்கள், விமானப்படை, கரும்புலிகள் அணி, காவல்துறை பிரிவு, நீதிநிர்வாக பிரிவு, விசேட தாக்குதல் படையணிகள், பெண்புலிகள் என்று கட்டமைத்த இராஜ்ஜியம் உலகத் தலைவர்களின் தன்மானத்திற்கே ஓர் அடியாக இருந்தது.
ஓயாத அலைகள் 3ன்போது அவர் சிறீலங்கா படைகளை பலாலி முகாமிற்குள் முற்றாக முடக்கி முழுமையான வெற்றியை எட்டித் தொட்டிருந்தார். மற்றய நாடுகளின் வேண்டுகோளுக்கு அமைய மனிதாபிமானத்தோடு 40.000 சிங்களப் படைகளுக்கு உயிர்ப்பிச்சை கொடுத்தார்.
ஆனால் இன்று சிங்களப் படைகள் தமிழ் மண்ணில் செய்த செயல்களை உற்றுநோக்கினால் எமது தேசியத்தலைவரின் மனிதாபிமானமும், மாசற்ற போர்த்திறணும் தெளிவாக அனைவருக்கும் புரியும்.
இறுதிக்கட்ட போரின்போது காயப்பட்ட பொராளிகளையும் மக்களையும் புல்டோசர்களை ஏற்றி நெரித்து. குற்றுயிராய் கிடந்த அத்தனை உயிர்களையும் குளிதோண்டிப் புதைத்தது. இப்படி வன்னியில் நடந்த மனித அவலங்கள் சொல்லிலடங்கா. இன்று சிங்களப் படைகள் செய்த செயலை அவராலும் செய்திருக்க முடியும். ஆனால் அவர் மனிதாபிமானத்திற்காகவும் உலக சமுதாயத்திற்காகவும் அதைத் தவிர்த்தார்.
கடந்த மே மாதம் விடுதலைப்புலிகளின் தலைவர் தனி ஒரு மனிதனாக உலகத்தின் 32 நாடுகளை (வல்லரசுகளை) எதிர் கொண்டார். சங்கிலியனோ, பண்டாரவன்னியனோ, வீரபாண்டிய கட்டபொம்மனோ, கடைசிச் சோழனோ எதிர் கொள்ளாத பெரும் சவால் இதுவாகும். கடந்த 2000 வருட வரலாற்றில் உலகப்போரை தனிமனிதனாக சந்தித்த ஒரேயொரு வீரத்தமிழனாகவும் எமது தேசியத் தலைவர் விளங்கியுள்ளார்.
அவர் போரில் தோற்கடிக்கப்பட்டார் என்பது தவறான கருத்தாகும். சென்ற ஆண்டு மாவீரர்நாள் உரையைப் பார்த்தால் அவரே இதைச் சொல்லியிருப்பதை உணரலாம். ஒரு சிறிய மக்கள் குழுவை எதிர்க்க இவ்வளவு பெரிய வியூகத்தை உலகநாடுகள் அமைப்பதா என்ற கேள்வியை ஒரு சிறிய சிரிப்புடன் கேட்டிருப்பார். அன்றே அவருக்கு யாவுமே தெரிந்துவிட்டது, அவருடைய மெல்லிய நமட்டு சிரிப்பிற்குள்ளேயே அது பொதிந்து கிடந்தது.
பிரபாகரன் தனது பிள்ளைகள், பெற்றோர், குடும்பம், தான் என்று அனைவரையும் களத்தில் வைத்தே அவர் போரை நடாத்தியிருக்கிறார் என்ற உண்மையை இப்போது நயவஞ்சக எதிரிகள் தெரிந்து கொண்டு மௌனமாக சிந்திக்கிறார்கள். எதிரிகள் மட்டும் பிரபாகரனுக்கு எதிராகப் போராடவில்லை. ஈழத் தமிழரே பல பிரிவுகளாகப் பிரிந்து அவருக்கு எதிராகப் போர் நடாத்தினார்கள். நடாத்தியும் வருகிறார்கள்.
பிரபாகரன் துரோகிகள், மற்றும் வஞ்சகர்கள் பலரை வெளியில் விட்டால் ஆபத்தென அருகில் வைத்திருந்தார் என்பதை இப்போது அனைவரும் உணர்கிறோம். சென்ற மாவீரர் நாள் உரையில் அவர் அதிகமாக பாவித்த சொல் ஆப்பு வைத்தல் என்பதுதான். உள்ளிருந்து ஆப்பு வைத்த அனைவரையும் அவர் அறிந்திருந்தார். இப்படியாக உள்ளிருந்து ஆப்பு வைத்தவர்கள் பற்றிய கதைகள் மேலும் வரும். காலம் அந்தக் கதைகளின் உண்மையை விடுவிக்கும்.
ஒரு இனத்தின் விடுதலை, சுதந்திரம், இறைமை சார்ந்து உள்ளும் வெளியுமாக அவர் உருவாக்கியிருக்கும் கோட்டுருவாக்கச் சித்திரங்கள் அசாதாரணமானது. அது ஒரு தொடர் கூட்டு உளவியல் தொடர்பானது. அது ஒரு இனத்தை காலத்திற்கு காலம் இயக்கக்கூடியது மட்டுமல்ல என்றென்றைக்கும் சேர்ந்து பயணிக்கக்கூடியதும் கூட. இதை நாம் தெளிவாகப் புரிந்திருந்தால் நாம் பல பிரிவுகளாக முரண்பட்டு பிளவுபட்டிருக்கவும் மாட்டோம்.
நேற்று மட்டுமல்ல இன்றும்கூட ஏன் நாளையும் கூட ஈழத்தமிழர்களின் ஏகபிரதிநிதிகளும் போராட்ட சக்திகளும் தலைவர் பிரபாகரன் தலைமையிலான தமிழீழ விடுதலைப் புலிகள்தான். இதை தற்போதைய யதார்த்தம் கேள்விக்குள்ளாக்கலாம் ஆனால் பிரபாகரனின் அந்த இடத்தையும் அவர் வகிக்கும் வரலாற்றுப் பாத்திரத்தையும் நாம் என்றென்றைக்கும் புறம் தள்ள முடியாது.
எனவே தலைவர் பிரபாகரனின் இருப்பு பல துயரங்களினூடாக அழிவுகளினூடாக மீண்டும் மீண்டும் உறுதிப்படுத்தப்பட்டுக் கொண்டேயிருக்கிறது – அது உறுதிப் படுத்தப்பட்டுக் கொண்டேயிருக்கும். இதை யார் புரிகிறார்களோ இல்லையோ தமிழர்கள் புரிந்து கொள்ள வேண்டும். ஏனெனில் எமது விடுதலையின் ஆதாரம் இதில்தான் தங்கியுள்ளது.
இனிவரும் தமிழர் வரலாற்றில் பிரபாகரன் : இல்லாமை என்பதே இல்லை – அவரது இருப்பே அதிமுக்கியமாகிறது. இதை புறந்தள்ளும் அரசியல் நடவடிக்கைகள் எதுவும் எமக்கு விடுதலையை பெற்றுத்தராது. மாறாக அடக்கப்பட்ட ஒடுக்கப்பட்ட தோற்கடிக்கப்பட்ட இனமாகவே மீதிக்காலத்தை இந்த பூமிப்பந்தில் கழிக்க வேண்டியிருக்கும். இதை நாம் கவனத்தில் கொள்ளவேண்டியது காலத்தின் அதிதேவையாகிறது. எனவே நாம் முரண்பாடுகளை களைந்து ஒருமித்து ஒரு குரலாக போராடவேண்டும் என்பதே உண்மை.
இன்று அவர் பிறந்தநாள் விழாவை அவர் இறக்கவில்லை என்ற உறுதியுடன் அனைவரும் கொண்டாடுவோம். ஆலயங்களில் சிறப்பு வழிபாடுகளை நடாத்தி அவருடைய நீண்ட ஆயுளுக்காக இறைவனை வேண்டிக்கொள்வோம். தொடர்ந்தும் தமிழீழ விடுதலைப் போருக்கு தேசியத்தலைவரின் சிந்தனைக்கு அமைய எமது போராட்டங்களை முன்நெடுப்போம். அதுவே நாம் அவருக்கு கொடுக்கும் சிறந்த பிறந்த நாள் பரிசாகும்.-தமிழ்மாறன்-
Read more... 
 
காலை வாரும் தமிழ் அமைப்புகளும் - தாயக தாகத்தில் ஒன்றுபட்ட தமிழரும்.
தமிழர் தாயகத்தின் தேசிய நினைவெழுச்சி நாள் நிகழ்வுகள் ஏறக்குறைய இந்த உலகப் பந்தை கடந்து சென்றுள்ளன. ஆயினும் மாவீரர் நாள் என்ற வரலாற்று பதிவு உருவான நாள் முதல் எனது அன்பார்ந்த தமிழீழ மக்களே என ஒலிக்கும் அந்த மெல்லிய குரல் இம்முறை நேரடியாக ஒலிக்காமை என்னவென்று விபரிக்கமுடியாத ஒரு உணர்ச்சியையும் கிளப்பியதையும் மறுக்கமுடியாது. இந்த நிலையில் தமது தேசியப் புதல்வர்களுக்கு வணக்கத்தை செலுத்த வந்த புலம்பெயர் தமிழ் மக்களின் தொகையும், உணர்ச்சியும் ஒரு தீர்மானமாக மாறி இருந்தமை இங்கு நோக்கத்தக்கது.
புலம் பெயர் நாடுகளில் தற்போது பேசப்படும் நாடுகடந்த அரசு, வட்டுக்கோட்டை தீர்மானம், மற்றும் மக்களவை போன்ற விடயங்களை விட கடந்த 27, 28, 29 ஆகிய நாட்களில் புலம் பெயர் மக்கள் மாவீரர் என்ற புனித வாக்குப் பெட்டிகளுக்கு முன்னால் நிறைவேற்றியிருக்கும் தீர்மானம் வலுவுள்ளது. கனடா முதல் ஒஸ்ரேலியா வரை பரந்து கிடக்கும் இந்த மக்கள் சக்தி ஏகமனதாக நிறைவேற்றிய மாவீரர் தீர்மானம் வட்டுக்கோட்டை தீர்மானத்தை விட ஆயிரம், ஆயிரம் மடங்கு வீரியமுள்ளது. அது மட்டுமல்ல இந்த முறை மாவீரர் தினத்திற்கு வழக்கத்திற்கு மாறாக இரண்டு மாவீரர்தின செய்திகள் வெளிவந்த கசப்பு போன்ற நிலமை இனிமேல் உருவாகக் கூடது என்ற ஒரு எழுதப்படாத தேசிய நலன் சார்ந்த தீர்மானத்தையும் மக்கள் கூட்டம் நிறைவேற்றியதையும் இங்கு சுட்டிக்காட்டப் படவேண்டும்.
விடுதலைப்புலிகளின் தலைமைச்செயலகம் மற்றும் விடுதலைப்புலிகளின் மூத்த தளபதி ராம் ஆகியோரின் ஊடாக வெளிவந்த இந்த மாவீரர்தின செய்திகள் குறித்து இனி ஆய்வு செய்வதற்கு பதிலாக புலம் பெயர் மக்களின் இந்த மாவீரர்தின தீர்மானத்திற்கு அனைவரும் மதிப்பளிக்க வேண்டியது ஒரு தார்மீகக் கடமையாகிறது.
கடந்த 27 ஆம் திகதியன்று ஐரோப்பிய நகரங்கள் மற்றும் கனடாவின் ஆங்காங்கே ஒன்றுகூடிய பல்லாயிரக்கணக்கான தமிழ்மக்கள் மெளனமாக நிறைவேற்றிய இந்த மாவீரர் தீர்மானம் அரசியல் அடிப்படையில், வரிவடிவில், கடதாசிகளில் பொறிக்கப்படும் வாசகங்களைக்கொண்ட தீர்மானத்தைவிட வலுவானது என்பது உறுதி. தேசிய நலனை முன்னிறுத்தி தமிழர் தாயகம் நடத்திய விடுதலைப் போராட்டம் பெரும் வேதனையான பல கட்டங்களைத்தாண்டி இன்று ஒரு உறைநிலைக்கு வந்தாலும் அந்த தேசிய நலனை கைவிடுவதற்கோ அல்லது அதனுடன் சமரசம் செய்துகொள்வதற்கோ தமிழினம் இன்னும் தயாரகவில்லை என்பதையும் இந்த நகர்வு எடுத்துக் காட்டியுள்ளதையும் நினைவில் நிறுத்தவேண்டும்.
கடந்த 27ஆம் திகதியன்று புகழிடமக்கள் சக்தி வெளிப்படுத்திய இந்த அபிலாசையை உள்வாங்கி அதற்கான செயற்திட்டத்தை வகுக்க வேண்டியதற்கான காலம் இன்னும் 12 மாதங்கள் வழங்கப்பட்டுள்ளதையும் நினைவுறுத்தவேண்டும். இதன் அடிப்படையில் 2010 ஆம் ஆண்டின் மாவீரர் நாளில் தமிழர் தாயகத்தின் சுதந்திர வாழ்வுக்காக என்ன செய்தீர்கள் என அசரீதியாக ஒலிக்கப்போகும் மாவீரர் குரலுக்கு ஒற்றுமையாக நின்று பதிலளிக்க வேண்டியதும் அனைத்து தமிழ் அரசியல் இயந்திரங்களின் பொறுப்பாக சுமத்தப்பட்டுள்ளது. வேடிக்கையாக குறிப்பிடப்படும் தமிழ் நண்டுக்கதை போல ஒருவர் காலை ஒருவர் வாரிவிடும் போக்கும் பனிப்போர் போன்ற உறைநிலை விரோதமும் இன்னமும் தொடர முனைவதும், மக்களின் இந்த மாவீரர் தீர்மானத்திற்கு முறனானது.
இலங்கைத்தீவில் தமிழ்த்தேசியத்தின் இருப்பு நிலைக்கு பெரும் ஆப்படிக்கும் வேலைகள் சிங்கள தேசத்தின் அரசதலைவர் தேர்தலை மும்முரப்படும் நிலையில் நான் பெரிது, எமது செயற்பாடு பெரிது, எமது தீர்மானம் பெரிது என செயற்படாமல் எம் தேசத்தின் இருப்பு பெரிது, அந்த மக்களின் சுதந்திர வாழ்வியல் பெரிது என செயற்படுவதையே இந்த மெளனமான மாவீரர் தீர்மானத்தினூடாக புலம் பெயர் மக்கள் வெளிப்படுத்தியமை உள்வாங்கப்படவும் வேண்டும். இந்த நிலையில் இந்த முறை எம்மை தொடர்ந்து சென்ற மாவீரர் தினம் என்பது வெறுமனவே தேசத்தை நினைவுறுத்தும் நாள் மட்டுமல்ல எம் தேசத்தை இனிவரும் காலத்தில் நிலையாக இருத்த வேண்டியதற்கான உறுத்தலையும் கொடுத்த ஒரு நாள் என்பது சந்தேகமில்லை.
கடந்த 30 ஆண்டு காலமாக எமது தேசவிடுதலைக்காக போராடி வித்துக்களாய் மண்ணில் வீழ்ந்து விடுதலைக்கு உரம் சேர்த்து மண்ணினுள் உறங்கும் மாவீரர்களின் தியாகங்களை புரம்தள்ளியோ அல்லது தன்னலம் கருதாது தன் இனம் வாழவேண்டி விடுதலைப் போரை ஆரம்பித்து அதை முன்னின்று நடாத்தி அளப்பரிய சாதனைகளை நிலைநாட்டி தமிழர்களுக்கென்றோர் பிரதேசத்தை கட்டுப்பாட்டில் வைத்து நடமுறை அரசாட்சி செய்துவந்த முப்படை கண்ட முதல் தமிழன் தமிழீழத் தேசியத் தலைவர் மேதகு வேலுப்பிள்ளை பிரபாகரனை புறம்தள்ளியோ, அன்றி ஒட்டுமொத்த தமிழர்களின் கனவான தமிழீழக் கோரிக்கையை புறம்தள்ளியோ செயற்படும் எந்த அமைப்புக்கோ, அவைகளின் செயற்திட்டங்களுக்கோ தமிழினம் இனி ஒருபோதும் ஆதரவு வழங்கத் தயாரில்லை என்பதையே இந்த மாவீரர் தீர்மானமும், அங்கு கூடிய மக்களின் தொகையும், அவர்களின் உணர்வுகளும் வெளிப்படுத்திநிற்கின்றன.
ஆகவே மக்களின் இந்த எழுச்சியும், உறுதியும் இன்னும் தாம் ஏமாறத்தயார் இல்லை என்பதையே எடுத்தியம்புகிறது. ஆதலால் அதற்கமைய மக்களி வெறுப்பை சம்பாதிக்காது, மக்களின் நேரங்களை வீணடிக்காது, மக்களின் வளங்களை வீண்விரயமாக்காது அவை அனைத்தையும் தகுந்த முறையில் தமிழ்த்தேசியத்தை கட்டியெழுப்புவதற்கு பயன் படுத்துவதையே தமிழர்கள் விரும்புகின்றனர் என்பது இந்த மாவீரர் தீர்மானத்தின் மூலம் விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கையாகவும் கொள்ளலாம்.
இதற்கமைய பல குழுக்களாக பிரிந்து ஆளுக்கொரு துருப்புச்சீட்டை கையில் எடுத்தவாறு தமிழரின் பிரதிநிகள் நாங்கள் என பேச்சளவில் சொல்லித்திரிவதை தவிர்த்து இதய சுத்தியுடன் தமிழர் தரப்பு பிரச்சனைகளை கையாண்டு மக்களின் விருப்பிற்கேற்ப எவை எவை எந்த எந்த நேரத்தில் செய்யப்பட வேண்டுமோ அவற்றை அந்தந்த நேரத்தில் செய்வது அவசியமாகிறது. இதைத் தவிர்த்து தொடர்ந்தும் தமது பதவி ஆசைகொண்டு சுயனலமாக தமது இருப்பையும், தமது அமைப்பையும் தக்கவைக்கும் நோக்கில் செயற்பட்டு தமிழ்த் தேசியத்தை புறந்தள்ளி நடப்பவர்கள் காலப்போக்கில் மக்கள் மத்தியிலிருந்து அன்னியப்பட்டுச்செல்வார்கள் என்பதையே இன்றைய காலம் உணர்த்தி நிற்கிறது.- தமிழ்மாறன்-
 
 
| This Month | 158 |